1. Home
  2. தமிழ்நாடு

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

1

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா’ என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது. வங்கக்கடல் ஓரத்தில் ஆலயம் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.

மாதாவின் பிறந்தநாளான செப்டம்பர் 8-ம் தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டு ஆண்டு தோறும் ஆகஸ்ட் இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி, கடந்த மாதம் 29-ம் தேதி ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

velankanni

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நாளை (செப். 7) நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (செப். 8) ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழாவிற்காக நாளை (செப். 8) நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Local-holiday

இன்று (செப். 7) இரவு தேர்பவனி, நாளை (செப். 8) மாதா பிறந்தநாள் விழா நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக வரும் 23-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like