1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு..!

1

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை பல்வேறு கட்டங்களாக விடுமுறை விடப்பட்டது. கடந்த 23-ம் தேதி ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. 27-ம் தேதி முதல் மேலும் சில பள்ளிகளுக்கு லீவு விடப்பட்டது. 

மிலாடி நபி, காந்தி ஜெயந்தி விடுமுறையை மையமாக வைத்து காலாண்டு விடுமுறை விடப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை கிடைத்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டன.

காலாண்டு தேர்வு விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது. இன்று அனைத்து அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. தனியார் மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இன்று வகுப்புகள் தொடங்குகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டதை போல 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விடுமுறை நீட்டிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

Trending News

Latest News

You May Like