1. Home
  2. தமிழ்நாடு

இந்த மாவட்டத்தில் மட்டும் பொங்கலுக்கு 6 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை..!

1

பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு ஜனவரி 14, 15, 16 (செவ்வாய், புதன், வியாழன்) ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்துள்ளது.

போகி பண்டிகை நாளான ஜனவரி 13ஆம் தேதியும் (திங்கள்) சேர்த்து விடுமுறை அறிவித்தால் முந்தைய சனி, ஞாயிறு வார விடுமுறைகளையும் சேர்த்து ஆறு நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அன்றைய தினம் (ஜனவரி 13) உள்ளூர் விடுமுறை விடப்பட்டு ஆறு நாள்கள் தொடர் விடுமுறை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் பழம்பெருமை வாய்ந்த மரகத நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா சிறப்பு தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். இந்த கோவிலில் மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி தாயார் உடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மூர்த்தி தீர்த்தம் ஸ்தலம் என்ற சிறப்புகளை இக் கோவில் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் ஜனவரி 13 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 13ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 25ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வெளியூர் செல்லும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒருவேளை ஜனவரி 13ஆம் தேதியை விடுமுறையாக அறிவித்தால் திருச்சி மாவட்டத்துக்கான விடுமுறை ஜனவரி 10ஆம் தேதியே தொடங்கி 16ஆம் தேதி வரை என 7 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

Trending News

Latest News

You May Like