1. Home
  2. தமிழ்நாடு

புதுச்சேரியில் பள்ளிகள் தொடங்கும் நேரம் மீண்டும் மாற்றம்..!

1

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் காலை 9 மணி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது புதுச்சேரி பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ள புதிய அட்டவணைப்படி, அனைத்து  அரசு பள்ளிகளும் காலை 9.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

காலை 9.15மணி முதல் 9.30 வரை வழிபாடு நடைபெறும். காலை 9.30 மணி மதியம் 12.25 வரை மூன்று பாடவேளை நடைபெறும். காலை 11 மணி முதல் 11.10 மணி வரை இடைவேளை. 

மதிய உணவு இடைவேளை 12.40 மணி முதல் 1.30 மணி வரை இருக்கும். மதியம் 1.30 மணி முதல் மாலை 4.20 வரை 4 பாடவேளை நடைபெறும் என்றும் இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like