1. Home
  2. தமிழ்நாடு

புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு..!

1

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 12-ம் தேதி அன்று தேர்வு முடிந்து 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குநரால் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தீவிர வெப்பம், வெப்ப அலைக்கான பொது சுகாதார ஆலோசனையின் தொடர்ச்சியாக, அனைத்து அரசுகளுக்கும் கோடை விடுமுறைகள் வரும் 29-ம் தேதி முதல் தொடங்கும்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வரும் 29-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இவ்வாறு  புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஜுன் 6-ம் தேதி திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like