நாளை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்) நாளை (டிசம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ச்சியான கனமழையைக் கருத்தில் கொண்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு கருதி, நாளை (டிசம்பர் 4) அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்துச் சிக்கல்கள் நீடிப்பதால், மாவட்ட நிர்வாகங்கள் இந்த அவசர முடிவை எடுத்துள்ளன. பெற்றோர்களும் மாணவர்களும் இந்த அறிவிப்பைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.