வருகிற 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் பலி தர்ப்பண சடங்குகளை செய்து ஆற்றில் குளித்துச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடி மாதம் பல ஆண்டுகளுக்கு பிறகு 2 அமாவாசையாக வருகிறது. அதாவது கடந்த ஜூலை 17-ம் தேதி அமாவாசையுடன் ஆடி மாதம் பிறந்தது. அதே போல் வருகிற ஆடி 31-ம் தேதி (ஆகஸ்ட் 16) மற்றொரு அமாவாசையும் வருகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினத்தினை முன்னிட்டு புதன்கிழமை (ஆகஸ்ட் 16) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
16-ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 9-ம் தேதி (சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும். 16-ம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப்பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என்று கூறியுள்ளார்.