1. Home
  2. தமிழ்நாடு

கேரளாவில் வரும் 24-ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

1

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்த நிலையில், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிபா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோருடன் தொடர்பில் இருந்த 1,080 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது வரை 6 பேர் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Nipah Virus

இதனிடையே, நிபா வைரஸ் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் ராஜிவ் பால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பதற்கான விகிதம் 2 விழுக்காடாக இருக்கும் நிலையில், நிபாவால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைய 40 முதல் 70 விழுக்காடு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில் ஆஸ்திரேலியாவில் இருந்து நோய் எதிர்ப்பு மருந்தான monoclonal antibody மருந்து 20 டோஸ்களை ஒன்றிய அரசு வாங்க இருப்பதாகவும் ராஜிவ் கூறியுள்ளார்.

Kerala

இந்த நிலையில், நிபா வைரஸ் பாதிப்பை அடுத்து, கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் செப்டம்பர் 24-ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிகள், தொழில்முறை கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களும் அடங்கும். இதற்கிடையில், வாரம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like