நாளை 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... தென்காசிக்கு இல்லை..!
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளையும் (டிச.19) அதிக கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நாளை(டிச. 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் நாளை வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்