திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 24-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் புனித தவூதியா மஜ்லிசில் நாகூர் ரிபாயிஜமா கலிபா கனிபாவா குழுவினரின் திக்ர் மற்றும் குப்பியத்து நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று வழக்கம்போல் நிகழ்ச்சியுடன் இரவு நாகூர் அப்துல் ஹமீது பைஜி மற்றும் பானா சாஹீப் குழுவினரின் ராத்திபத்துல் ஜலாலியா நடைபெற்றது. இதில் தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹீப் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவை காண வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு வரும் நவம்பர் 24-ம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்தார்.