1. Home
  2. தமிழ்நாடு

இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!

1

கர்நாடகா  முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மூன்று நாட்கள் (டிசம்பர் 10 முதல் 12 வரை) துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நாட்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்.

எம்.எம்.கிருஷ்ணா முன்னாள் ஆளுநர், முன்னாள் முதலமைச்சர், முன்னாள் மத்திய அமைச்சர், சட்டமன்ற சபாநாயகர் எனப் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பெங்களூரு நகரை இந்தியாவின் சிலிக்கான் வேலியாக மாற்றியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. பொது வாழ்வில் இவரது சிறப்பான பங்களிப்பு காரணமாக 2023ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷன் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சுமார் 50 ஆண்டுகள் காங்கிரஸ் உடன் பயணித்த நிலையில் 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். கடந்த ஆண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், சாம்பவி மற்றும் மாளவிகா என இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

மேலும் இன்றைய தினம் (டிசம்பர் 11) பள்ளிகள், அங்கன்வாடிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தலைநகர் பெங்களூரு மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாளைய தினம் அரசு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்படும்.

பொதுப் போக்குவரத்திலும் எந்தவித பாதிப்புகளும் இல்லை. பேருந்து, ரயில்கள், மெட்ரோ ரயில் சேவைகள் தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்கும். மறைந்த கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் இறுதிச் சடங்கு நாளைய தினம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் முழு அரசு மரியாதை உடன் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like