1. Home
  2. தமிழ்நாடு

வரும் 31-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

1

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும்.

இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோமதி அம்பாள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து காலை 6.16 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற பூஜைகளை சிவராமன் தலைமையிலான பட்டர்கள் செய்திருந்தனர்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

Tenkasi

விழாவில் 9-ம் திருநாளான வருகிற 29-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு 11-ம் திருநாளான 31-ம் தேதி தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. அன்று காலை 9 ஸ்ரீகோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து மதியம் 12 மணிக்கு தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு சிவபெருமான் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், அன்று இரவு 12.05 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

இந்த நிலையில், ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும், கல்லுாரிகளுக்கும் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் உள்ளூர் அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Local-holiday

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆடித்தபசு திருநாள் 31.07.2023 திங்கட்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 19.08.2023 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like