1. Home
  2. தமிழ்நாடு

வரும் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

1

உலகளவில் மிகவும் பிரசித்திப்பெற்ற தேவாலயங்களில் ஒன்று வேளாங்கண்ணி மாதா ஆலயம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தேவாலயத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து செல்கின்றனர். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் திருவிழா என்பது மிகவும் கோலாகலமாக நடக்கும். 

Nagai

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 10 நாள் திருவிழா வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவையொட்டி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாக்களில் அமைந்திருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Local-holiday

இதற்கான அறிவிப்பை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்தையொட்டி நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த 2 தாலுகாக்களிலும் ஆகஸ்ட் 29-ம் தேதிக்கான விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் மாதம் 29-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like