தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு!
X

தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. மீண்டும் பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், நவம்பர் 16ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு, அனைத்துக் கல்லூரிகள், கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஏழு மாதங்களாக மூடிக்கிடந்த பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படுவதால் சமூக இடைவெளி, கிருமி நாசினி, முகக்கவசம் போன்ற சுகாதாரக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it