1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி வேன் - ரயில் விபத்து : ரெயில்வே மாறுபட்ட விளக்கம்..!

Q

பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி?
'Non Interlocking' ரெயில்வே கேட் என்றால், அதனை மூடுவதற்கு தொலைபேசி மூலமே தகவல் தரப்படும்.
தொலைபேசி மூலம் தகவல் அளித்து கேட் மூடியதை உறுதிப்படுத்திய பின்னரே ரெயில் செல்வதற்கு சிக்னல் அளிக்கப்படும்.
செம்மங்குப்பத்தில் ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக உறுதி அளித்தபின், பள்ளி வேனை மட்டும் கேட் கீப்பர் அனுமதித்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்று காலை சுமார் 7.45 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது வேன் ஓட்டுநர் வேனை வேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட். கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார். இதேபோன்று கேட்டை பாதி மூடி கொண்டிருக்கும்போது, வேன் ஓட்டுநர் உள்ளே சென்றார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் கூறி வரும் நிலையில், ரெயில்வே மாறுபட்ட விளக்கம் அளித்துள்ளது.

Trending News

Latest News

You May Like