1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி மாணவர்கள் குஷி..! இந்த மாவட்டத்திற்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை..!

1

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் 'சித்திரைத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 15ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவி இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில், “திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் 'சித்திரைத் தேர்த் திருவிழா நடைபெறும் 15.04.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை தினமாக அறிவித்தும், மேற்படி விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் 03.05.2025 (சனிக்கிழமை) அன்று அரசு வேலை நாளாகவும் அறிவித்து ஆணையிடப்படுகின்றது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 1ஆம் தேதி (திங்கள்) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சனி, ஞாயிறு விடுமுறையை சேர்த்தால் திருச்சி மாவட்டத்திற்கு 4 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like