பள்ளி செல்லும் மகள் கர்ப்பம்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த தாய் !

சென்னை செங்குன்றம் தீயம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரோகித்(23). இவரும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். மேலும் அவ்வப்போது சிறுமியை ரோகித் தனியாக சந்தித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இருவரும் தனியாக இருக்கும் போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரோகித் சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்தாள்.
இதனையடுத்து திருமணம் குறித்து பேசினால் ரோகித் தவிர்த்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து ரோகித் மீது புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியை ரோகித் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதனால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேநேரம் கர்ப்பமான சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
newstm.in