1. Home
  2. தமிழ்நாடு

பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாகும் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்..!

1

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
 

இந் நிலையில் தேர்வு தேதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்று ஒரு தேதியை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது;

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வழங்கிய ஆலோசனையின்படி, வரும் திங்கள்கிழமை (14.10.2024) அன்று இந்த கல்வி ஆண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளோம்.
 

இவ்வாறு அந்த பதிவில் அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார்.



 

கடந்த முறை 10ம் வகுப்புக்கான எழுத்துத் தேர்வு மார்ச் 26ல் தொடங்கி, ஏப்ரல் 8ம் தேதி நிறைவு பெற்றது. 11ம் வகுப்பு தேர்வு மார்ச் 4ம் தேதி ஆரம்பித்து, மார்ச் 25ம் தேதி முடிந்தது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடந்தது. இம்முறையும் அதுபோலவே தேர்வு தேதிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like