"அன்பு குழந்தைகளின் பெற்றோரே" விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!

தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்கப்பட்டது.மேலும் மாணவர்கள் அரசு பள்ளியை நோக்கி வர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இன்றைய மாணவர்களே நாட்டின் எதிர்கால தூண்கள். மாணவர்களின் வகுப்பறை சூழல் சுமையானதாக இல்லாமல், இனிமை உடையதாகவும், ஒவ்வொரு நாளும் என்ன புதுமை வகுப்பறையில் நிகழ உள்ளதோ என்ற எதிர்பார்ப்பில் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருவதற்கும், எத்தகைய அசாதாரண சூழலையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்கும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும்.
மகிழ்ச்சியான வகுப்பறை நிகழ்வினை, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெறுவதற்காக, தமிழ்நாடு அரசு, சத்துள்ள காலை உணவு, மதிய உணவு, விலையில்லா பாடப் புத்தகங்கள். நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள். கணித உபகரணப் பெட்டி , புவியியல் வரைபட புத்தகம், காலணிகள், கம்பளிச் சட்டை, மழைக்கால ஆடை மற்றும் பேருந்து பயண அட்டை போன்ற நலத்திட்டங்களை இலவசமாக வழங்கி வருகின்றது.
இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை!
#WATCH | அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, விழிப்புணர்வு பாடலை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!#SunNews | @tnschoolsedu | #SchoolEducationDepartment pic.twitter.com/iPKLk0IZ5h
— Sun News (@sunnewstamil) March 5, 2024