பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..! காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது..!
அக்டோபர் -6 வரை காலாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பள்ளி திறக்கும் நாள் அன்றே திருத்திய விடைத்தாள்களை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.