மாரடைப்பு வந்த போதும் உயிரை கொடுத்து மாணவர்களை காப்பாற்றிய பள்ளி ஓட்டுநர்..!
வெள்ளக்கோவில் சோ்ந்தவா் மலையப்பன் (49). இவா் அருகிலுள்ள தனியாா் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவா் புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து குழந்தைகளை வேனில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளாா். வெள்ளக்கோவில் காவல் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சேமலையப்பன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளாா். வலியால் துடித்த அவா் மிகவும் சிரமப்பட்டு வேனை சாலையோரமாக நிறுத்திவிட்டு, இருக்கையிலேயே மயங்கினார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இறந்து போன சேமலையப்பனுக்கு உமா, ஜானகி, லலிதா ஆகிய மூன்று மனைவிகள் உள்ளனா். தற்போது லலிதா மட்டும் இவருடன் உள்ளாா். இச்சம்பவம் குறித்து லலிதா கொடுத்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.