இன்று 16 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..!!

வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த 25-ந்தேதி முதல் கனமழை பெய்து வருகிறது . இதனால் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தஞ்சை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டார்
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.