டெண்டர் விடப்பட்டதில் ஊழல் !! பாரத் நெட் திட்டம் டெண்டர் ரத்து !! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..

டெண்டர் விடப்பட்டதில் ஊழல் !! பாரத் நெட் திட்டம் டெண்டர் ரத்து !! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..

டெண்டர் விடப்பட்டதில் ஊழல் !! பாரத் நெட் திட்டம் டெண்டர் ரத்து !! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..
X

பாரத் நெட் என்பது மத்திய அரசின் ஒரு திட்டமாகும். அனைத்து கிராமங்களுக்கும் இண்டர்நெட் இணைப்பு வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களுக்கு இணைப்பு வழங்க 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது.

திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,950 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் , திமுக ஆகியவை குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.

இந்நிலையில், டெண்டர் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை  என கூறி மத்திய வர்த்தக அமைச்சகம் டெண்டரை  ரத்து செய்துள்ளது. கருவிகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் உள்ள குறைகளை களைந்து மீண்டும் டெண்டர்  விட மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it