1. Home
  2. தமிழ்நாடு

ரியா சக்ரபோர்த்தி எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் உத்தரவு ரத்து..!

1

டிகர் சுஷாந்த் சிங். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தான் தங்கியிருந்த அபார்ட்மன்ட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்தார். அவருடைய மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் வெளிவராமல் உள்ளது.

இதில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபோர்த்தி மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக விசாரிக்கும்போது போதைப்பொருள் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரியாவையும், அவரது அண்ணன் சோவிக் சக்ரபோர்த்தியையும் காவல்துறையினர் கைது செய்தனர். பல்வேறு விமர்சனங்களை ரியா சக்ரபோர்த்தி எதிர்கொண்டார். பலரும் அவரை 'சூனியக்காரி', 'மாயக்காரி' என்றெல்லாம் விமர்சித்திருந்தனர்.

இந்த வழக்கில், 2020-ம் ஆண்டு நடிகை ரியா சக்ரவர்த்தி, அவருடைய சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி மற்றும் அவர்களின் தந்தை இந்திரஜித் ஆகியோருக்கு எதிராக, வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் உத்தரவை சி.பி.ஐ. அமைப்பு பிறப்பித்து இருந்தது.இதனை எதிர்த்து மனுதாரர்கள் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் இந்த லுக்-அவுட் நோட்டீசுக்கான உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

எனினும், சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீராம் ஷிர்சத், இந்த உத்தரவை 4 வார காலத்திற்கு ஒத்தி வைக்கும்படி கோரினார். ஏனெனில், சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அமைப்பு மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் தேவைப்படுகிறது என கேட்டு கொண்டார். ஆனால், தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட்டு அமர்வு மறுத்து விட்டது.
 

Trending News

Latest News

You May Like