1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி..!

1

கடந்த ஏப். 21 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.   தேர்தல் விதிகளை மீறியதாக ராகுல் காந்தி மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த புகார்கள் குறித்து ஏப்ரல் 29-ஆம் தேதி காலை 11 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.  இந்த புகார்களின் மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், பாஜக தலைவர் நட்டாவும் பதிலளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.  மேலும், கட்சித் தலைவர்களின் பேச்சு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெறுப்பு பேச்சுக்கள் காரணமாக தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் எஸ்.ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்தார். பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின் போது மதரீதியாக பிரச்சாரம் செய்ததாகவும் இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது என்பதால் பிரதமர் மோடி,  6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணைக்கு பதிலளித்த நீதிபதி சச்சின் தத்தா இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்து கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி தள்ளுபடி செய்தார். ஏனெனில் இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.  மேலும் இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனுதாரர் மனு அளிக்கும்பட்சத்தில் அதன் மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். 

Trending News

Latest News

You May Like