“எஸ்.பி.பியின் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்” : சச்சின் உருக்கம்!

எஸ்.பி.பி பாடிய குறிப்பிட்ட பாடல் ஒன்று எப்போதும் தன்னுடயை ப்ளே லிஸ்டில் இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் தெரிவித்துள்ளார்.
எஸ்பிபியின் மறைவு ஒட்டு மொத்த நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கை தாண்டி மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளை சேர்ந்த ரசிகர்கள் சோகத்தில் உள்ளளனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்தி வீரர் சச்சின் டெண்டுகள் ட்விட்டரில் எஸ்பிபி குறித்து பதிவிட்டுள்ளார். அதில் எஸ்பிபியின் ஒரு பாடல் எப்போதும் தன்னுடையே ப்ளே லிஸ்டில் இருக்கும் என கூறியுள்ளார்.
Always loved listening to S. P. Balasubrahmanyam ji’s music. Deeply saddened by his demise. His song ‘Sach Mere Yaar Hai’ from Saagar is one my favorites which I have always had on my playlist.
— Sachin Tendulkar (@sachin_rt) September 25, 2020
May his soul rest in peace.
My prayer and thoughts with his family & friends. 🙏🏼 pic.twitter.com/N4unwWlhHI
சாகர் படத்தில் இடம்பெற்ற சச் மேரே யார் ஹை என்ற பாடல் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது என சச்சின் கூறியுள்ளார். சாகர் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். ஆர்.டி.பர்மன் அந்தப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
newstm.in