எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களே.. இன்று முதல் கிரெடிட் கார்டு கட்டணம் அதிகரிப்பு..!

எஸ்.பி.ஐ. வங்கியின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் மாத தவணை முறையில் பொருட்கள் வாங்கும்போது, இன்று முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.
வணிக நிறுவனங்கள், மின்னணு வர்த்தக தளங்கள், செயலிகள் ஆகியவற்றின் வாயிலாக எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டை பயன்படுத்தி மாத தவணை திட்டத்தில் பொருட்களை வாங்கும்போது இன்று முதல் கூடுதலாக செயல்பாட்டுக் கட்டணமாக 99 ரூபாய் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு, கூடுதல் வரியும் வசூலிக்கப்படும் என எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே இது குறித்த அறிவிப்பை எஸ்.பி.ஐ. கார்டு நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வருகிறது. இதையடுத்து, பி.என்.பி.எல். எனும் ‘முதலில் வாங்குங்கள்; பின் செலுத்துங்கள்’ திட்டத்தின் கீழ், எஸ்.பி.ஐ. கார்டை பயன்படுத்தி தவணை முறையில் பொருட்களை வாங்குவது கூடுதல் செலவு பிடிப்பதாக இருக்கும்.
வியாபார நிறுவனங்கள் பூஜ்ய செலவிலான மாத தவணை திட்டத்தை வழங்கினாலும், எஸ்.பி.ஐ. கார்டு வாடிக்கையாளர்கள் இன்று முதல் 99 ரூபாய் மற்றும் வரி ஆகியவற்றை கண்டிப்பாக செலுத்தியே ஆக வேண்டும்.