1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் இந்தச் சலுகை கிடையாது..!

1

எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சில கிரெடிட் கார்டுகளின் விதிகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும். இன்னும் சில விதிமுறைகள்ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகின்றன. ஏப்ரல் 1 முதல் எந்தெந்த எஸ்பிஐ கார்டுகள் ரிவார்டு புள்ளிகளைப் பெறாது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

 

எஸ்பிஐ கார்டு எலைட்,
எஸ்பிஐ கார்டு பிரைம் ,
எஸ்பிஐ கார்டு ப்ரைம் அட்வான்டேஜ்,
எஸ்பிஐ கார்டு பிளாட்டினம்,
எஸ்பிஐ கார்டு பிரைம் புரோ,
எஸ்பிஐ கார்டு எலைட் அட்வாண்டேஜ்,
எஸ்பிஐ கார்டு பல்ஸ்,
சிம்ப்லி கிளிக் எஸ்பிஐ கார்டு,
சிம்பிள் கிளிக் அட்வான்டேஜ்,
எஸ்பிஐ கார்டு ஷௌர்யா செலக்ட்,
எஸ்பிஐ கார்டு பிளாட்டினம் அட்வாண்டேஜ்,
டாக்டர் எஸ்பிஐ கார்டு.

 

ஏப்ரல் 15 முதல் எந்த கார்டுகளுக்கு ரிவார்டு புள்ளிகள் கிடைக்காது என்று இங்கே பார்க்கலாம்.

ஏர் இந்தியா எஸ்பிஐ பிளாட்டினம் கார்டு,
ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கார்டு,
ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டு பிரீமியர்,
லைஃப் ஸ்டைல் ஹோம் சென்டர் எஸ்பிஐ கார்டு.

மேலும் வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்கள் மட்டும் இன்றி, டெபிட் கார்டுகளுடன் தொடர்புடைய பிற கட்டணங்களையும் எஸ்பிஐ வங்கி உயர்த்த உள்ளது.டெபிட் கார்டு மாற்றுவதற்கு ரூ. 300+ ஜிஎஸ்டி), டூப்ளிகேட் கார்டுக்கு ரூ. 50+ ஜிஎஸ்டி) மற்றும் சர்வதேச பரிவர்த்தனைகள் போன்ற சேவைகளுக்கான கட்டணங்களை வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும்.   இந்த அனைத்து கட்டணங்களும் 18% ஜிஎஸ்டிக்கு உட்பட்டது. இதற்கிடையில், எஸ்பிஐ கோல்டு மற்றும் பல SBI கார்டுகளுடன் வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளின் மீதான வெகுமதி புள்ளிகளிலும் மாற்றங்களை கொண்டு வருகிறது.  

Trending News

Latest News

You May Like