1. Home
  2. தமிழ்நாடு

புகார் அளித்த கஸ்டமருக்கே ஷாக் கொடுத்த எஸ்பிஐ வங்கி..!

1

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எஸ்.பி.ஐ. நாடு முழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளுடன் இந்த வங்கி உள்ளது.எஸ்பிஐ வங்கி வங்கி ஊழியர்கள் வேண்டா வெறுப்பாகத்தான் நடத்துவதாக நெட்டிசன்கள் அடிக்கடி விமர்சிப்பதுண்டு.

இந்த நிலையில் தான், எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்ற ஒரு வாடிக்கையாளர் வங்கியின் சேவை குறைபாடு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டியிருந்தார். 

ராஜஸ்தானின் பாலி பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்கு பிற்பகல் 3 மணிக்கு சென்றுள்ளார். ஆனால், அந்த நேரத்தில் வங்கி ஊழியர்கள் யாருமே இல்லாமல் வெறிச்சோடி இருந்துள்ளது. இது குறித்து கேட்ட போது.. வங்கி ஊழியர்கள் அனைவரும் மதிய உணவு இடைவேளைக்கு சென்று இருப்பதாக தகவல் கிடைத்தது. ஒருபக்கம் மதிய உணவு இடைவேளை என எதுவும் கிடையாது என்று எஸ்பிஐ சொல்கிறது. ஆனால் முரண்பாடாக ஒட்டு மொத்த ஊழியர்களும் மொத்தமாக லஞ்ச் பிரேக் சென்றுள்ளனர் என்று எஸ்பிஐ வங்கியை டேக் செய்து தனது ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.

இந்த பதிவுக்கு எஸ்பிஐ வங்கி அளித்த பதில்தான் நெட்டிசன்களை அதிரவைத்துள்ளது. எஸ்பிஐ அளித்த பதிலில், 'உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். எனினும், வங்கி கிளைக்குள் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இவை தவறாக பயன்படுத்தப்பட்டால் நீங்கள் பொறுப்புக்குள்ளாக நேரிடும். ஆகவே, சமூக வலைத்தளங்களில் இருந்து இந்த புகைப்படத்தை உடனே நீக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த பதில் பொறுப்பற்ற விதத்தில் இருப்பதாகவும் புகாரளித்த வாடிக்கையாளருக்கு தீர்வு சொல்வதற்கு பதிலாக அவரை மிரட்டும் தொனியில் பதிவிட்டு இருப்பது ஏற்க முடியாது என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Trending News

Latest News

You May Like