1. Home
  2. தமிழ்நாடு

அடித்து சொல்லும் அண்ணாமலை! 2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும்..!

1

அண்ணாமலையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பேசியுள்ள அண்ணாமலை 2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என தெரிவித்துள்ளார். எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும் தொடர்ந்து ஓராண்டாக தான் இதைத்தான் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனித்து ஒரு கட்சி 40 சதவீத வாக்குகளை பெறுமா என்றால் தற்போதைய சூழ்நிலையில் அது இல்லை என்றும் ஒரு திராவிட கட்சியின் வாக்கு சரிய தொடங்கும் என்றும் அது காலத்தின் கட்டாயம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் ஒரு திராவிடக் கட்சியின் வாக்கு 12 சதவீதத்துக்கு கிழ் செல்லும் என்றும் அந்த கட்சியில் உள்ள தொண்டர்கள் வெளியே வருவார்கள் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

அப்போது புதிய கட்சி அடையாள காணப்படும் என்றும் 2026 அதற்கான ஆரம்பம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2031 வரும் போது தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு வேலை இல்லாத ஒரு மாநிலமாக தமிழ்நாடு மாறியிருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை வரும் 28 ஆம் தேதி லண்டனில் இருந்து சென்னை திரும்ப உள்ளார்.சென்னை திரும்பியதுமே கிராமம் கிராமாக நடைபயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கட்சியில் நிர்வாகிகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Trending News

Latest News

You May Like