1. Home
  2. தமிழ்நாடு

டீசல் வாகனங்களுக்கு சீக்கிரம் குட்-பை சொல்லுங்கள் இல்லையெனில் வரியை இன்னும் அதிகரிப்போம் - நிதின் கட்கரி..!

1

டீசலில் இயங்கும் வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர்களின் மாசு வரிக்கான ஜி.எஸ்.டியை கூடுதலாக 10% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரைத்துள்ளார். இதனால் டீசல் கார்கள், ஜெனரேட்டர்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் டீசல் வாகனங்கள் மற்றும் டீசல் மூலம் இயங்கும் எஞ்சின்களின் பயன்பாட்டை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.

டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்க நிதி அமைச்சகத்திடம் நிதின் கட்கரி இன்று மாலை பரிந்துரை கடிதம் வழங்க உள்ளதாக தெரிகிறது. சீக்கிரம் டீசல் வாகனங்களுக்கு குட்-பை சொல்லுங்கள், இல்லையெனில் வரியை இன்னும் அதிகரிப்போம். வாகனங்கள் விற்பனை உங்களுக்கு கடினமாகிவிடும் என கார் உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லாரிகளுக்கு டீசலை தவிர மாற்று எரிபொருள் இல்லை என்றும் சம்மேளன நிர்வாகி தன்ராஜ் தெரிவித்துள்ளார். ஆனால் டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி அதிக மின்சார வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்க மத்திய அரசு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like