1. Home
  2. தமிழ்நாடு

இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை: சவுதி இளவரசர்..!

1

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி ஜி-7 அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். 

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் விருந்தினர்களாக அழைக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநாட்டை இத்தாலி தலைமை தாங்கி நடத்துகிறது. 

இத்தாலில் உள்ள அபுலியா பகுதியில் நேற்று தொடங்கி வரும் 15-ம் தேதி வரை ஜி-7 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். 

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக மாநாட்டில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா உள்பட 12 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் ஆசிஸ் அல் சவுத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஜி-7 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும், தற்போது ஹஜ் யாத்திரை பணிகளை கவனிக்க வேண்டியிருப்பதால் மாநாட்டில் தன்னால் பங்கேற்க இயலாது என்றும்  தெரிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like