1. Home
  2. தமிழ்நாடு

சவூதி அரேபியா இளவரசர் முகமட் பின் சல்மானின் ஜப்பானிய பயணம் ரத்து..!

1

பட்டத்து இளவரசர் முகமட் பின் சல்மானின் ஜப்பானிய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மன்னர் உடல்நிலம் குன்றியிருப்பதால் ஜப்பானுக்கு திட்டமிடப்பட்ட நான்கு நாள் பயணத்தை அவர் ஒத்தி வைத்துள்ளதாக ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட பேச்சாளரான யோஷிமாசா ஹயாஷி தெரிவித்துள்ளார்.

பட்டத்து இளவரசரின் பயணம் மே 20ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. இந்தப் பயணம், 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணமாகவும் இருந்தது.

பட்டத்து இளவரசரின் பயணம் எப்போது இருக்கும் என்பதை இரண்டு நாடுகளும் பின்னர் முடிவு செய்யும் என்று அன்றாட செய்தியாளர் கூட்டத்தில் ஹயாஷி கூறினார்.

சவூதி அரேபியாவின் நிலவரப்படி உண்மையான ஆட்சியாளரான பட்டத்து இளவரசர் ஜப்பானிய பயணத்தில் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவைச் சந்தித்துப் பேசுவதாக இருந்தது.

ஜப்பானிய நிறுவனங்களையும் சந்தித்து திரவ ஹைட்ரஜன் விநியோகத்தை வலுப்படுத்தும் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுவார் என்றும் சொல்லப்பட்டது.

மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் நுரையீரல் தொற்றால் அவதியுறுகிறார் என்று சவூதி பிரஸ் ஏஜென்சி தகவல் வெளியிட்டதும் இளவரசர் முஹமட்டின் பயணமும் ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் ஜப்பானுக்குச் செல்ல பட்டத்து இளவரசர் திட்டமிட்டிருந்தார். அந்தப் பயணமும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

Trending News

Latest News

You May Like