1. Home
  2. தமிழ்நாடு

அமைதியாக நடந்து முடிந்த தேர்தல் - சத்திய பிரதா சாகு..!

1

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் சட்டம் - ஒழுங்கு பிரச்னை இன்றி அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்கு இயந்திரங்களும் பெரிய அளவில் பழுது ஏற்படலாம் வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த முறை பெற்ற வாக்குப் பதிவை விட இந்தமுறை 7 மணி நிலவரப்படி கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவிகித வாக்குகளும், குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவிகித வாக்குகளும், தென் சென்னையில் 67.37 சதவிகிதம், வட சென்னையில் 69.26 சதவிகிதமும் வாக்குப் பதிவு நடந்துள்ளது.மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிகளவில் தங்களது வாக்குகளை செலுத்தினர்” என்று தெரிவித்தார்.

 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.

தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம்:

* கள்ளக்குறிச்சி – 75.67%
* தருமபுரி – 75.44%
* சிதம்பரம் – 74.87%
* பெரம்பலூர் – 74.46%
* நாமக்கல் – 74.29%
* கரூர்- 74.05%
* அரக்கோணம் – 73.92%
* ஆரணி – 73.77%
* சேலம்- 73.55%
* விழுப்புரம்- 73.49%
* திருவண்ணாமலை – 73.35%
* வேலூர் – 73.04%
* காஞ்சிபுரம் – 72.99%
* கிருஷ்ணகிரி – 72.96%
* கடலூர் – 72.40%
* விருதுநகர் -72.29%
* பொள்ளாச்சி -72.22%
* நாகப்பட்டினம் – 72.21%
* திருப்பூர் – 72.02%
* திருவள்ளூர் – 71.87%
* தேனி – 71.74%
* மயிலாடுதுறை – 71.45%
* ஈரோடு – 71.42%
* திண்டுக்கல் – 71.37%
* திருச்சி -71.20%
* கோவை – 71.17%
* நீலகிரி – 71.07%
* தென்காசி – 71.06%
* சிவகங்கை -71.05%
* ராமநாதபுரம் -71.05%
* தூத்துக்குடி – 70.93%
* திருநெல்வேலி – 70.46%
* கன்னியாகுமரி – 70.15%
* தஞ்சாவூர்- 69.82%
* ஸ்ரீபெரும்புதூர் – 69.79%
* வட சென்னை – 69.26%
* மதுரை – 68.98%
* தென் சென்னை -67.82%
* மத்திய சென்னை – 67.35%
மொத்தம் – 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like