1. Home
  2. தமிழ்நாடு

நாளை சனி வக்ர பெயர்ச்சி : இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது..!

1

சனி பகவான் எப்போதும் கெட்ட பலன்களை அளிப்பது கிடையாது, நல்ல பலன்களையும் அளிப்பார். எதிர்வரும் சனி வக்ர நிலை இத்தகைய காலத்தை உண்டாக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களை கொண்டுவருகிறது. குறிப்பாக வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள், பதவி உயர்வு காண்பீர்கள். புதிய வருமானத்திற்கான வழியை உண்டாக்குவீர்கள். குடும்பத்தில், உறவுகளுக்கு இடையே இதுநாள் வரை நீடித்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் - மனைவி இடையே மகிழ்ச்சி பெருகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடன் பிரச்சனைகள் நீங்கும். கடன் கொடுத்த இடத்தில், கேட்காமலேயே பணம் திரும்ப கிடைக்கும். இருப்பினும், குழந்தைகள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.


துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்கள் கையில் எடுக்கும் காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும், அதிர்ஷ்டம் உங்களுக்கு துணை நிற்கும். நிதி சார்ந்த விவகாரத்தில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும், கவனமாக முதலீடு செய்தால் பலன் நிச்சயம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இதுநாள் வரை நீடித்த குழப்பங்களுக்கு தீர்வு காண்பீர்கள், மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா போன்றவற்றை முயற்சிக்கலாம். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும், இருப்பினும் சொத்து சார்ந்த முதலீடுகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.


தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு பலன்களை அதிகம் அளிக்கிறது. வியாபாரத்தில் வருமானம் பெருகும், புனித ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் வாய்ப்பு கிட்டும். சகோதர சகோதரிகளுடனான உறவு இனிமையாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதர்வு கிடைக்கும், இருப்பினும் உங்களின் கடுமையான உழைப்பே உங்களுக்கு கை கொடுக்கும். குடும்ப உறவுக்குள் இருந்த மன கசப்புகள் நீங்கி, மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே வெளிப்படையான பேச்சுவார்த்தை அவசியம், ஒளிவு மறைவு கூடாது. உடல் ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனைகளை இருக்காது, சளி - காய்ச்சல் போன்ற சிறு பிரச்சனைகள் வந்து செல்லாம். குழந்தைகள் வழியே நல்ல செய்திகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.


விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிரிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்பு பெருவீர்கள், நம்பகமான தரப்பில் இருந்து போதுமான முதலீடுகளை பெறுவீர்கள். தொழிலை பெருக்குவதற்கான பண உதவிகள் கிடைக்கும். கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்லலாம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டுதல்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.குடும்பத்தினருடன் சேவை சார்ந்த பணிகளில் ஈடுப்படுவீர்கள். மன மகிழ்ச்சிக்கு தேவையான விஷயங்கள் குடும்பத்தில் நடைபெறும். வம்ச விருத்தி தொடர்பான செய்தி ஒன்று வரலாம் அல்லது திருமணம் தொடர்பான ஒரு நல்ல செய்தி வரலாம். திருமணம் முடித்தவர்கள், இணக்கமான உறவை அனுபவிப்பர். கடன் தொல்லைகள் நீங்கும், நெடு நாட்களாக நிலுவையில் இருந்த கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நெருக்கடி குறைந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.

மகர ராசி :

மகர ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசியின் மூன்றாவது வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிப்பார். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக செயல்படும். புதிய இடத்தில் வேலை வாய்ப்புகளை பெறலாம். தைரியம் அதிகரிக்கும். பல துறைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

மீன ராசி :

மீன ராசிக்கு சனியின் வக்ர பெயர்ச்சியால் சுப பலன் உண்டாகும். ஏனெனில் இந்த ராசியின் லக்ன வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கப் போகிறார். இதனால் மீன ராசிக்காரர்கள் ஆரோக்கியத்திலும் ஆற்றலிலும் முன்னேற்றத்தை காண்பார்கள். சுய சிந்தனை மற்றும் சுய வளர்ச்சி அதிகரிக்கும். சமூக வாழ்வில் செல்வாக்கும் அதிகரிக்கும். வெளிநாடு செல்லலாம். சொகுசு வாழ்க்கை கிடைக்கும். வியாபாரத்தில் நன்மை உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்யப்படும் வேலையில் வெற்றி கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like