1. Home
  2. தமிழ்நாடு

வைரலாகும் அயோத்தி ராமர் கோவில் செயற்கைக்கோள் புகைப்படங்கள்..!

1

ராமர் கோவில் பகுதி 2.7 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் கட்டுமான பணிகள் 57 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளன. மூன்றடுக்குகளாக இந்த கோவில் அமைந்துள்ளது.இரும்பின் ஆயுட் காலம் 80 -90 ஆண்டுகள் மட்டுமே என்பதால் இந்த கோவில் கட்டுமான பணிக்கு இரும்பு பயன்படுத்தவில்லை. எக்குவும் பயன்படுத்தவில்லை. ராமர் கோவிலின் உயரம் 161 அடியாக இருக்கும்.

குதுப் மினாரின் உயரத்தில் 70 சதவீதம் கொண்டது ஆகும். தரமான கிரானைட், மணற்கல் மற்றும் மார்பிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிமெண்ட் எதிலுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. சிமெண்ட் எதிலுமே பயன்படுத்தப்படவில்லை. கற்களை இணைக்கும் பகுதிக்கு கூட சிமெண்டுகளோ சுண்ணாம்பு சாந்தோ பயன்படுத்தவில்லை என்று கட்டுமான பணிகளை மேற்கொண்ட அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இப்படி சிறப்புமிக்க ராமர் கோவிலை விண்வெளியில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ராமர் கோவிலை விண்ணில் உள்ள நமது செயற்கைக்கோள் மூலம் படம் பிடித்துள்ளது.

இந்தப் படத்தை இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்ஸிங் சென்டர் முகமை பகிர்ந்துள்ளதாக தகவல். கடந்த 2023 டிசம்பர் 16-ம் தேதி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் பகிர்ந்துள்ள இந்தப் படத்தில் சரயு நதி, அயோத்தி ராமர் கோயில், ரயில் நிலையம், தசரத் மஹால் போன்றவை ஹைலைட் செய்யப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.


 


 

Trending News

Latest News

You May Like