சசிகலாவின் கனவு பலிக்காது.. அமைச்சர் எச்சரிக்கை !

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் விரைவில் வெளிவருவார் என கூறப்படுகிறது. அடுத்தாண்டு ஜனவரி தான் வெளிவருவார் என சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் முரண்பட்ட கருத்துகளை கூறி வருகின்றனர். அதிமுகவுடன் அமமுக இணைக்கப்பட்டு சசிகலா தலைமையில் செயல்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக செயற்குழு கூட்டம் வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் எவ்வாறு செயற்குழு கூட்டம் நடந்ததோ, அதேபோன்று ஆரோக்கியமான ஆலோசனையை முன்னெடுத்து இந்த செயற்குழு கூட்டம் இருக்கும்.
தேவைப்பட்டால் கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டி குழு அமைக்கப்படும் எனக்கூறினார்.
அதேநேரம், அதிமுகவில் இடைவெளி ஏற்படும், அதில் நாம் எப்பொழுது நுழைய முடியும் என்று எதிர்பார்ப்பவர்களின் கனவுகள் பலிக்காது என சசிகலா வருகை தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா தான் முதலமைச்சராக வரவேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்தவர் அமைச்சர் உதயகுமார் என கூறப்படுகிறது.
newstm.in