சசிகலா அறிக்கை.. முதலை கண்ணீர்.. ஜெயக்குமார் விளாசல்..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாவது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் பெரம்பூர் பாரதி சாலையில் அன்னதானம் வழங்கினர். இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: “ஜெயலலிதா நினைவிடத்திற்கு முறையாக அனுமதி பெற்றே சென்றோம்.
ஆனால், நாங்கள் வெளியே வருவதற்குள், அமமுகவினரை போலீசார் உள்ளே விட்டனர். கலவரம் வர வேண்டும் என்பதற்காகவே சிலர் இப்படி செய்கின்றனர். இதற்கு காவல் துறையும் துணை போனது வேதனையாக உள்ளது. நாங்கள் சட்டத்தை மதிப்பதால் அமைதியாக இருந்தோம்.
அமமுக என்ற கட்சி அதிமுகவிற்கு எதிரானது. இனியும் அதிமுகவை கைப்பற்ற போகிறேன் என்று கூறினால் தொண்டர்கள் நம்பமாட்டார்கள். அடிப்படை உறுப்பினராக கூட இல்லாதவர்கள், வேண்டுமென்றே தலைமைக் கழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தினர்.
தகுதி உள்ளவர்களை மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தோம். தகுதி இல்லாத தொண்டர்கள் போர்வையில், தகராறில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக சசிகலா அறிக்கை விடுவது, முதலை கண்ணீர் விடுவதற்கு சமம்” என்று அவர் கூறினார்.