1. Home
  2. தமிழ்நாடு

பாஜக மாநில செயலாளர் பதவியிலிருந்து சரவணக்குமரன் விலகல்..!

1

 பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த திரு. S. சரவணக்குமரன் Ex.IRS சொந்த காரணங்களுக்காக பாஜகவின் கட்சி பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், தொடந்து கட்சியின் கொள்கையான தேசியம் மற்றும் தெய்வீகத்திற்கு பணி செய்வதாகவும் கடிதம் கொடுத்துள்ளார்.

அவருடைய கடிதத்தினை ஏற்றுக்கொண்டு இன்று முதல் அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார். மத்திய அரசின் உயர் பதவியினை துறந்து தேசப் பணிக்காக கட்சியில் இணைத்து இதுநாள் வரை சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். சொந்த பணியினை விரைவில் முடித்து தேச முன்னேற்றத்திற்கு நல்ல பொறுப்புக்களை ஏற்று மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like