1. Home
  2. தமிழ்நாடு

அகஸ்தியர் ஜெயந்தியை முன்னிட்டு யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி..!!

அகஸ்தியர் ஜெயந்தியை முன்னிட்டு யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி..!!


ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு அகஸ்தியர் ஜெயந்தி தினமான நேற்று (டிச 23) சப்தரிஷி ஆரத்தி சிறப்பாக நடைபெற்றது.

இதற்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து செயல்முறையை துவக்கினர். படிப்படியாக மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய அந்த செயல்முறை சக்திநிலையில் பிரம்மாண்ட தன்மையை அந்த சூழலில் உருவாக்கியது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை 8 மணி வரை நடந்தது. இதை தொடர்ந்து ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றது.

அகஸ்தியர் ஜெயந்தியை முன்னிட்டு யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி..!!

இந்த சப்தரிஷி ஆரத்தியானது சிவன் தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகள், அவரது அருளைப் பெறுவதற்காக அவர்களுக்கு கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த செயல்முறையாகும். இது வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஆதியோகியில் தான் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like