திருச்சி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதி..!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இலங்கை ஜனாதிபதியிடம் தாம் மீண்டும் தீவு நாட்டிற்கு திரும்பி தனது வயதான தாயுடன் வாழ உதவுமாறு கோரிக்கை விடுத்தார் சாந்தன் .32 வருட சிறைவாசத்தின் போது தனது தாயாரை சந்திக்க முடியாததால், இலங்கைக்கு விஜயம் செய்து தனது தாயை கவனித்துக் கொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.மேலும் அவர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கியுள்ளார்
இன்று சாந்தன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அவருக்கு கால்கள் வீங்கி, 40 கிலோ வரை எடை குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் திருச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர் இலங்கை குடியுரிமை பெற்றவர் ஆவார்.