1. Home
  2. தமிழ்நாடு

சாண்டா க்ளாஸ் தாத்தா - யாரையும் ஏமாற்றாத கிறிஸ்துமஸ் தாத்தா..!!

சாண்டா க்ளாஸ் தாத்தா - யாரையும் ஏமாற்றாத கிறிஸ்துமஸ் தாத்தா..!!


வெண்ணிற தாடியும், வெண்மை நிற ரோமங்களையும் கொண்டு பஞ்சு போன்ற மனதைக் கொண்டதன் அடையாளமாக சிவப்பு நிற வெல்வெட் மேலாடையை அணிந்தவர். தொந்தியுடனும் குல்லாவுடனும், முதுகு முழுக்க பரிசு மூட்டைகளைச் சுமந்து கண்களின் அன்பையும், உதடுகளில் சிரிப்பையும் தேக்கியவர்.நீண்ட கிளைகளையுடைய கொம்புகளைக் கொண்டிருக்கும் மான் சுமக்கும் வண்டியில் பரிகளை சுமந்தபடி.... காண்பவரையெல்லாம் சந்தோஷப்படுத்திட முடியும் என்பதை காலங்கள் மாறியும் நிரூபித்துக் கொண்டு வருபவர் கிறிதுமஸ் தாத்தா என்று அழைக்கப்படும் சாண்டா க்ளாஸ்தான்.

பண்டிகைக் காலம் வந்துவிட்டாலே குழந்தைகளின் கண்கள் சாண்டாவை எதிர் நோக்குவார்கள். இருக்காதா.. தேவதூதனின் வழிகாட்டுதலில் நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்ற எண்ணங்கள் குழந்தைகளை வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.இனிப்புகளை அள்ளித்தந்து, குழந்தைகளை உற்சாகப்படுத்தும் திறன் இவருக்கே உரித்தானது. எந்தக் குழந்தையும் சாண்டாவிடம் ஏமாந்ததில்லை. கிறிஸ்துமஸ் தாத்தா எப்போது வந்தார் என்று தெரிந்து கொள்வோம்?

சாண்டா க்ளாஸ் தாத்தா - யாரையும் ஏமாற்றாத கிறிஸ்துமஸ் தாத்தா..!!

முதன்முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர் செயிண்ட் நிக்கோலஸ் தான். தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில் 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் நிக்கோலஸ். இவர் பிஷப் பதவியில் இருந்தவர். ஏழைக் குழந்தைகளிடம் அதிக பிரியமும், நேசமும் உடையவர். உதவி தேவைப்படுபவர்களை அறிந்து அவர்கள் கேளாமலேயே உதவுவதற்காகவே இறைவன் தம்மை அனுப்பியுள்ளான் என்னும் நம்பிக்கை கொண்டவர். குழந்தைகள் இறைவனுக்கு ஒப்பானவர்கள்,அவர்களை மகிழ்வித்தால் இறைவனே மகிழ்வார் என்னும் நம்பிக்கை கொண்டவர்.

குழந்தைகளுக்கு பிடித்த விஷயங்களைச் செய்தாலும், பிடித்ததைக் கொடுத்தாலும் மகிழ்ச்சியடைவார்கள் என்று எண்ணி பழங்கள், சாக்லெட்கள், சிறு சிறு பொம்மைகள், சிறு பொருள்கள் என அவர்கள் விரும்பும் வண்ணம் பரிசுகளைக் கொடுப்பார்.உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் சாண்டா க்ளாஸை தெரியாமல் இருக்க மாட்டார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமில்லை என்னும் அளவுக்கு குழந்தைகள் மனதில் உருவேறிய கோமாளி தாத்தா என்று கூட இவரை செல்லமாக சொல்லலாம்.

யாருக்கும் யாவும் உண்டு. அனைத்தையும் இறைவன் அளிப்பார் என்று குழந்தைகளிடம் பதியவைக்கவே உலகெங்கிலும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு முன்னதாக கிறிஸ்துமஸ் தாத்தாக்களாய் வேடமணிந்து விரும்பிய பரிசுகளை குழந்தைகளுக்கு கொடுத்து தாங்களும் சந்தோஷம் அடைகிறார்கள். உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. அவரை வரவேற்கும் விதமாக குண்டு தாத்தாவுக்கு நான் அளிக்கும் பரிசு என்று குழந்தைகளும் அன்பு பொங்க சாக்லெட்கள் கொடுக்கிறார்கள்.

சாண்டா க்ளாஸ் தாத்தா - யாரையும் ஏமாற்றாத கிறிஸ்துமஸ் தாத்தா..!!

சாண்டா க்ளாஸ் தரும் பரிசு சிறிதாக இருந்தாலும் இறைவன் தனக்கு கொடுத்துஅனுப்பியுள்ளார் என்று மகிழும் குழந்தைகள் பிறருக்கும் நாம் பரிசுகளை கொடுத்து அவர்களையும் மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வளர்கின்றன. பண்டிகைகள் பகிர்ந்தளிக்க வேண்டியவை என்று உணர்த்தி விட்டு சென்ற செயிண்ட் நிக்கோலஸ் என்பவரால் தான் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உருவானார்கள். இன்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் உருவெடுக்கிறார்கள். காலங்கள் மாறினாலும், நாளையும் கிறிஸ்துமஸ் தாத்தாவாய் உருவெடுப்பார்கள்.

இறைவனின் பரிசை எதிர்நோக்கி சாண்டா க்ளாஸை வரவேற்கும் அத்தனை குழந்தைகளுக்கும் இறைவனின் ஆசிர்வாதம் கிட்டும். ஹேப்பி கிறிஸ்துமஸ்... சுட்டீஸ்.... சுட்டீஸை மகிழ்விக்கும் சாண்டா க்ளாஸ்-க்கும் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ்....

Trending News

Latest News

You May Like