இன்று சங்கடஹர சதுர்த்தி: 108 முறை இந்த மந்திரம் சொல்லுங்க...
இந்த நாளில், ஆனைமுகனைத் தரிசித்து வேண்டிக்கொண்டால், கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாது போகும். வாழ்வில் உயர்வு அனைத்தும் தந்தருள்வார். காரியத் தடைகள் விலகும். நினைத்ததெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் ஆனைமுகத்தான்!
குறிப்பாக, மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம். மேலும் அம்மன் ஆலயங்கள், சிவாலயங்களில் உள்ள விநாயகர் சந்நிதிகளுக்கும் சென்று வழிபடலாம்.
அப்போது, பிள்ளையாரப்பனுக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் விசேஷம்.
அதேபோல், வீட்டில், விளக்கேற்றி, விநாயகரை மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, கொழுக்கட்டை, சுண்டல் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்வது மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
'ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே, வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா! என்ற கணபதியின் மூல மந்திரத்தை 21, 51, 108 என்று முடிந்த அளவுக்கு சொல்லி வேண்டினால் நிச்சயம் வீட்டில் சுபீட்சமும் அமைதியும் நிலவும் என்பது நம்பிக்கை.
எனவே, சங்கடஹர சதுர்த்தியில், மாலையில் ஆலயம் செல்லுங்கள். ஆனைமுகனை வணங்குங்கள். உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தீர்த்து வைப்பார் விநாயகப் பெருமான்..