1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்..!

1

இன்னும் 2 வாரத்தில் தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில் கோவை மாநகராட்சி தரப்பில் செய்யப்படும் தூய்மை பணிகளை முன்னெடுக்க ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக ரூ.2,000 நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படுவதாக தெரியவருகிறது.

தங்களுக்கு வெறும் ரூ.2000 போனஸாக வழங்குவது போதாது, தங்களின் 1 மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாலை முதல் மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டமானது அதிகார குரல் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக மாநகராட்சி துணை ஆணையாளர் சிவக்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தங்களுக்கு 1 மாத சம்பளத்தை போனசாக வழங்கினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து இதற்கு ஒரு தீர்வு தெரிந்து கொண்டு தான் செல்வோம் என கூறியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like