சனம் ஷெட்டி புகார்… தர்ஷன் மீது வழக்குப்பதிவு!

நடிகை சனம் ஷெட்டி கொடுத்த புகாரை அடுத்து அவரது முன்னாள் காதலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கும், நடிகை சனம் ஷெட்டிக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் .
இந்நிலையில் சனம் ஷெட்டி கொடுத்த புகாரின்பேரில் தர்ஷன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடையாறு மகளிர் காவல்துறையினர் இந்த வழக்குப்பதிவு செய்துள்ளனர்.2 ஆண்டுகளாக காதலித்து, திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாக ஷனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் தர்ஷன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மோசடி, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனம் ஷெட்டி பிக்பாஸ் சீசன் 4இல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in