சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது: சிஐடியூ..!
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள சிப்காட்டில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் சாம்சங் நிறுவனத்தின் பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சாம்சங் நிறுவனத்தில், சுமார் 1800 பேர் நிரந்தர தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்த தொழிற்சாலையில், சங்கம் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9 ஆம் தேதி போரட்டம் தொடங்கியது. சுமார் 1,200 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், சாம்சங் நிறுவனத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 'சாம்சங்' ஆலை நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, சி.வி.கணேசன் ஆகியோருக்கு உத்தரவிட்டார். இதன்படி, சுங்குவார்சத்திரத்தில் உள்ள சிப்காட் அலுவலகத்தில் 'சாம்சங்' நிறுவன அதிகாரிகள், தொழிலாளர் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சார்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையடுத்து இரு தரப்பினரும் சென்னை தலைமை செயலகத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், சாம்சங் நிறுவனம் 14 கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டுள்ளதாகவும், தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக அமைச்சர்கள் கூறுகையில், "சாம்சங் நிர்வாக தரப்பினரும் சில கோரிக்கைகளை மறுத்தனர். நாங்கள் அறிவுறுத்தியதன் பேரில் 14 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அறிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக சொல்வது என்றால் ஏசி பேருந்துகள் ஐந்துதான் இருந்தது. இதில், 108 பேருந்துகளிலும் ஏசி பஸ்களாக மாற்றுவதாக உறுதி தந்து இருக்கிறார்கள். தொழிலாளர்கள் யாரேனும் இறந்தால் உடனடியாக ஒரு லட்ச ரூபாய் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டும் இன்றி சம்பளம் இந்த மாதத்தில் இருந்து 5 ஆயிரம் உயர்த்தி தருவதாக சொல்லியிருக்கிறார்கள். அதனால், நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், நாளையில் இருந்து பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தொழிற்சங்க அங்கீகாரம் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது எனவும் இதனால் நாங்கள் தலையிட வில்லை என்றும் அமைச்சர் தாமோ அன்பரசன் கூறினார்.
இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக வெளியான தகவலை மறுத்து சாம்சங் இந்தியா சிஐடியூ தலைவர் முத்துக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது. அமைச்சர்கள் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. உடன்பாடு ஏற்பட்டதாக ஊடகங்களில் வரும் தகவல் உண்மைக்கு மாறானது. சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு பெரும்பாலான தொழிலாளர்களுக்கு எதிரானது என்பது மட்டுமல்லாமல் இந்த போராட்டத்தை திசை திருப்பும் செயல் ஆகும். இதை சிஐடியு தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

.png)