அசத்தலான புதிய மாடல் செல்போனை வெளியிட்டது சாம்சங்.. அடேங்கப்பா இவ்வளவு வசதிகளா!!!!

சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனை ஜெர்மனியில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவுக்கும் இதே ஸ்மார்ட்பான் விரைவில் வரவுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் M சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்புள்ள நிலையில் சமீபத்தில் சாம்சங் M31s அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது கேலக்ஸி M51 என்ற ஸ்மார்ட்போன் ஜெர்மனியில் அறிமுகமாகியுள்ளது.
7,000mAh சக்தி கொண்ட பெரிய பேட்டரி, பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் செப்டமர்பர் இரண்டாவது வாரத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனின் விலை 30 ஆயிரம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம்.