சாம்+ராஜ்= சாம்ராஜ்... ராஜ் தோளில் தலைவைத்து செல்ஃபி எடுத்த சமந்தா..!
சமந்தாவும், இயக்குநர் ராஜ் நிடிமொருவும் காதலிப்பதாக சுமார் ஓராண்டு காலமாக பேசப்படுகிறது. ஆனால் ராஜோ, சமந்தாவோ காதலை இதுவரை உறுதி செய்யவில்லை. ராஜ் நிடிமொருவுக்கு திருமணமாகி மனைவி இருப்பதால் இந்த காதல் வேண்டாம் சமந்தா என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தான் ராஜ் நிடிமொருவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சமந்தா.
சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ம் தேதி ரிலீஸானது. இந்நிலையில் தான் தயாரித்த முதல் பட வெற்றியை கொண்டாட சில புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சமந்தா கூறியிருப்பதாவது, சுபம் படத்தை எங்களுடன் பார்த்து, கொண்டாடியதற்கு நன்றி. சுபம் படத்துடன் எங்கள் பயணம் துவங்கியிருக்கிறது. என்ன ஒரு துவக்கம் என தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படங்களில் ஒரேயொரு புகைப்படம் மட்டும் வைரலாகிவிட்டது.
ராஜ் நிடிமொரு தோளில் தலைவைத்து சமந்தா எடுத்த செல்ஃபி தான் வைரலாகியிருக்கிறது. தானும், ராஜும் காதலர்கள் என்பதை இந்த புகைப்படம் மூலம் உறுதி செய்துவிட்டார் சம்மு. நிடிமொரு குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறோம் சமந்தா. இனி சமந்தா, ராஜ் ஆகியோரை சாம்ராஜ் என்றே அழைக்க வேண்டும். அப்போ சமந்தா, ராஜ் பற்றி வந்த தகவல் எல்லாம் வதந்தி இல்லை உண்மை தான் போன்று. ராஜுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா இல்லையா என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜ் மற்று டிகே இயக்கிய ஃபேமிலி மேன் 2, சிடாடல் ஹனி பன்னி ஆகிய வெப்தொடர்களில் நடித்திருந்தார் சமந்தா. இந்நிலையில் சமந்தாவும், ராஜும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தான் காதலிப்பதாக சமந்தா சொல்லவே இல்லை. ஆனால் இது கூடாக் காதல். ராஜ் ஒரு லவ்வர் கிடையாது மற்றொரு பெண்ணின் கணவர். இந்த காதல் உங்கள் பெயரையும், வாழ்க்கையையும் கெடுத்துவிடும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
கெரியரை பொறுத்தவரை தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார் சமந்தா. நடிகையாக 15 ஆண்டுகள் வெற்றிகரமாக இருந்து வரும் சமந்தா சுபம் படம் மூலம் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். தயாரிப்பாளராக இருப்பது கடினம் என்று அண்மையில் தெரிவித்தார். இருந்தாலும் அதில் ஒரு சந்தோஷம் கிடைக்கிறது என்கிறார்.