நாளை சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை சாத்தப்படும்..! ஏன் தெரியுமா ?

கடந்த 14-ந் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்ததை தொடர்ந்து தற்போது வருகிற சனிக்கிழமை அதாவது நாளை சந்திர கிரகணம் நடைபெற இருக்கிறது.
இந்த சந்திரகிரகணமானது வருகிற 28-ந் தேதி நள்ளிரவில் தொடங்கி 29-ந் தேதி அதிகாலையில் முடிவடைகிறது.இந்த சந்திரகிரகணமானது பகுதி சந்திர கிரகணமாக நிகழ இருக்கிறது. இந்த சந்திர கிரகணமானது பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது இந்த சந்திரகிரகணமானது நிகழ இருக்கிறது.
சந்திரகிரகணத்தையொட்டி சமயபுரம் கோவில் நடை சாத்தப்படும் என கோவில் இணை ஆணையர் கல்யானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நாளை (சனிக்கிழமை) பவுர்ணமி அன்று சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் அன்று பிற்பகல் 3 மணிக்கு விளக்குபூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு சாயராட்சை பூஜை முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு எல்லாம் நடை சாத்தப்படும்.
மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் இணை ஆணையர் கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.