1. Home
  2. தமிழ்நாடு

படப்பிடிப்பு இல்லாததால் புது முயற்சியில் சமந்தா..!

படப்பிடிப்பு இல்லாததால் புது முயற்சியில் சமந்தா..!


கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ள நிலையில், எதையாவது பொழுது போக்கிற்காக செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தற்போது அரசு பல தளர்வுகளை அறிவித்திருந்தாலும், படப்பிடிப்புகள் நடைபெறாத நேரத்தில் நடிகர் நடிகையரும் வீட்டிற்குள்ளேயே இருந்தனர்.

அப்போது தோட்டப் பராமரிப்பு, பிட்னஸ் க்காக உடற்பயிற்சிகள் செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என்று கலக்கிக் கொண்டு இருந்தனர். அவற்றை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி தங்கள் ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்து கொண்டே இருந்தனர்.

உண்மையிலேயே அவர்கள் பதிவேற்றிய வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. அந்த வகையில் நடிகை சமந்தா இந்த ஊரடங்கு காலத்தில், அவர்கள் வீட்டில் மாடித் தோட்டம் அமைப்பது, தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற செயல்களை செய்து வருவதில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவியின் மருமகளும், ராம் சரண் தேஜாவின் மனைவியுமான உபாசானா ஒரு யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கினார். அதில் ராம் சரணின் பிட்னஸ் ரகசியங்கள், உடலுக்குத் தேவையான டயட் இப்படி பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தனது சேனலுக்கு சமந்தாவை அழைத்த உபாசனா அதில் தக்காளி சாதம் செய்வது எப்படி? என்று சமந்தாவை சமைக்க வைத்துள்ளார். இரு பிரபலங்களும் செய்யும் அந்த சமையல் ரசிக்கவும் ருசிக்கவும் அருமையாக உள்ளது. இந்த வீடியோவை சாமந்தாவும் தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like